TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2018 2085 days 615 0
  • யூகோ வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக அதுல் குமார் கோயல் பதவியேற்றார்.
  • 2018ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியன்று இராணுவத்தின் விமானப் படை தனது 33வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இதனைக் குறிப்பிடும் விதமாக புதுதில்லியில் இந்தியா கேட் அருகே அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் மலர் வளையம் வைக்கும் விழா நடத்தப்பட்டது.
  • சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்திருக்கின்றது.
  • மத்திய அமைச்சரவைக்கு ரஷ்யாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு உடன்படிக்கைகள் பற்றியும் விளக்கப்பட்டது.
    • போக்குவரத்துப் பயிற்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்திட ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை.
    • ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்திட கூட்டுப் பங்கு நிறுவனமான ரஷ்யாவின் ரயில்வேத் துறையுடன் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்