TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 7 , 2018 2082 days 653 0
  • நாட்டில் மிக வயதான வில்லுப்பாட்டு கலைஞரான 84 வயதடைந்த பூங்கணி அம்மா காலமானார்.
  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளுக்கான தேசிய மாணவர் படையின் (National Cadet Coprs - NCC) இயக்குநரகம் ஜோத்பூரில் நடைபெற்ற அகில இந்திய வாயு சேனைப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கின்றது.
    • தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த இயக்குநரகம் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கின்றது.
  • ஒடிசா அரசு ஊழல் தடுப்பு அதிகாரிகளின் தொழிற்முறை அறிவைத் தக்க வைப்பதற்காக அவர்களது அறிவையும் திறன்களையும் தொடர்ச்சியாக மேம்படுத்தும் நோக்கில் மாநிலத் தலைநகரில் மாநில கண்காணிப்பு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த இருக்கின்றது.
  • ஊழியர்கள் குழுவின் தலைமைகளுக்கான தலைவருக்கு கீழான (Chairman of Chiefs of Staff Committee) ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் 12வது தலைவராக (Chief of Integrated Defence Staff) லெப்டினன்ட் ஜெனரல் P.S. ராஜஸ்வர் பதவியேற்றார்.
    • இவர் தற்சமயம் ராணுவ அமைச்சகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தலைமை அலுவலகத்தில் முன்னோக்கித் திட்டமிடுதல் (Perspective Planning) பிரிவின் பொது இயக்குநராக உள்ளார். இவர் அக்டோபர் 31ம் தேதியன்று ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் துவா என்பவருக்குப் பதிலாக பதவியேற்கிறார்.
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், புது தில்லியில் கொரியக் குடியரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்துடன் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
  • மத்திய ஆயுஷ் துறை அமைச்சரும், மத்திய கலாச்சார துறை இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு) இணைந்து இரண்டு நாள் நிகழ்வான “ஆயுர்வேதத்தில் வணிக வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் மீதான தேசியக் கருத்தரங்கு” என்ற மாநாட்டை புதுதில்லியில் துவக்கி வைத்தனர்.
    • இம்மாநாடு ஆயுர்வேதத் துறையில் தொழில்முனைவோர்களையும் ஆயுர்வேதத் துறையின் அனைத்து பங்குதாரர்களையும் வியாபார வாய்ப்புகளை நோக்கி ஊக்கப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கின்றது.
  • தனது அண்டை நாட்டுடனான 61 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக ஷாங்காயில் நடைபெறும் சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் இந்தியா பங்கேற்கும்.
  • மத்திய அரசும் ஆந்திரப் பிரதேச அரசும் உலக வங்கியுடன் இணைந்து ஆந்திர பிரதேசத்தில் ஏழை மற்றும் பலவீனமான விவசாயிகளுக்கு அவர்களது விவசாய உற்பத்தி, லாபம் மற்றும் பருவநிலை தாங்குதிறன் ஆகியவற்றை அதிகப்படுத்த 172.20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்