TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 10 , 2018 2210 days 706 0
  • இந்திய இரயில்வேயானது மொத்தமுள்ள தனது 16 மண்டலங்களில், அகலவழி இரயில் பாதைகளில் (தண்டவாளத்திற்கு இடைப்பட்ட தூரம் 1676 மி.மீ. அல்லது 1.67 மீ) அமைந்துள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்கை (Unmanned Level Crossings - UMLCs) அல்லது ஆளில்லாத இருப்புப் பாதைக் கடப்பு நிலையை தனது 12 மண்டலங்களில் முழுவதுமாக நீக்கியுள்ளது.
  • ஒடிசா மாநில அரசானது 2018 ஆம் ஆண்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையின் நோக்கம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்மயமாக்கலின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதாகும்.
  • இந்தியாவின் இந்துத் திருவிழாவான தீபாவளியை அனுசரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் தபால் நிர்வாகமானது (UNPA - United Nations Postal Administration) தியாஸ் விளக்குடன் கூடிய (சிறப்பு நிகழ்ச்சிக்கான அட்டை) சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை, அமைதிப் பணிகளுக்காக அணு ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் அலுவல் ரீதியான கடவுச் சீட்டுகளுக்கான விசா நடைமுறையில் தளர்வு ஆகிய 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் மலாவி பயணத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • தீபாவளியைக் கொண்டாடுவதற்காக நியூயார்க்கின் நட்சத்திர சின்னமான பேரரசு மாகாணக் கட்டிடமானது (Empire State Building) முதன்முறையாக ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்யப் பட்டது. இது பேரரசு மாகாண நில அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இந்திய மன்றங்களுக்கான கூட்டமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்