- சென்னையில் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக “ஒற்றுமை ஓட்டம்” என்ற நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்டோபர் 31 அன்று தொடங்கி வைத்தார்.
- “நெருப்பு நீல நிறத்தில் எரிகின்றது : இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் வரலாறு” என்ற புத்தகத்தை விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களான காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்புத்தகம் நவம்பர் 30 ஆம் தேதியில் வெளியிடப்படவிருக்கிறது.
- இது இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் வரலாற்றைப் பற்றிய புத்தகமாகும். இது வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட்ஸின் புதிய பதிப்பகத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட விருக்கிறது.
- புது டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் இல்லத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஆலோசனைக் கூடத்தில் யோகா பிரதிநிதியான M.S. மான்சி குலாட்டி எழுதிய ‘யோகாவும் பொறுப்புணர்வுகளும்’ என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.
- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC – Appointment Committee of the Cabinet) மூன்று மூத்த இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளான
- K.டாஷ்
- அகிலேஷ் ரஞ்சன் மற்றும்
- நீனாகுமார்
ஆகியோரை நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (CBDT - Central Board of Direct Taxes) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
- இந்த புதிய மூன்று உறுப்பினர்கள் சேர்க்கையுடன் சேர்த்து CBDT ஆனது 5 உறுப்பினர்கள் மற்றும் தலைவருடன் முழு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.