TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2018 2070 days 608 0
  • 2018 நவம்பர் 11 அன்று புகழ்பெற்ற இந்திய பொருளாதார நிபுணரும், அறிஞருமான பேராசிரியர் திருக்கோடி காவல் நீலகண்ட ஸ்ரீனிவாசன் (85) சென்னையில் காலமானார்.
    • இவர் தற்போதைய RBI ஆளுநர் உர்ஜித் படேலுக்கு பேரியல் பொருளியல் குறித்த அறிவுரையாளர் ஆவார்.
  • பழம்பெரும் காமிக் புத்தக எழுத்தாளரும் மார்வெல் காமிக்ஸின் முன்னாள் தலைவருமான ஸ்டான் லீ (95) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.
    • இவர் 1961ல் மார்வெல் காமிக்ஸிற்காக ஃபெண்டாஸ்டிக் போர் என்பதை உருவாக்கினார். மேலும் ஸ்பைடர் மேன் (Spider Man) மற்றும் தி இன்கிரடியபில் ஹல்க் (Incredible Hulk) போன்ற தலைப்புகளையும் உருவாக்கியவர் ஆவார்.
  • பொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு கோவாவின் பஞ்ஜிமின் நகரில் உள்ள கலா அகாடமியில் துவங்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெறும் இம்மாநாட்டினை ‘பொது சுகாதாரத்திற்கான யோகா’ என்ற கருத்துருவுடன் ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
  • தமிழ்நாட்டின் கார்த்திகேயன் பாண்டியன் இந்தியாவில் 57-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். செர்பியாவின் நோவி சாட் என்ற நகரில் நடைபெற்ற போட்டியில் கூட்டாக முதலிடத்தை வென்று இறுதிப் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்