விருந்தோம்பல் சேவை நிறுவனமான ஓயோ இவ்வாண்டு டிசம்பர் 01-ம் தேதி முதல் தனது நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசியப் பிரிவிற்கான தலைமை செயல் அதிகாரியாக இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷை நியமித்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கூகுள் மேக சேமிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆரக்கிள் நிறுவனத்தின் பொருள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரான இந்திய அமெரிக்கா தாமஸ் குரியன் பதவியேற்பார்.
தாமஸ் குரியன் டயானி கிரீனி என்பவருக்குப் பதிலாக பதவியேற்பார்.
2016 ஆம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு ஆதரவளித்த இளையோர் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே, பிரெக்ஸிட் (BREXIT) அமைப்பின் புதிய செயலாளராக பிரிட்டன் பிரதமர் தெரசா மேவால் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான தெரசா மேவின் வரைவு அறிக்கை தொடர்பாக பதவி விலகிய டொமினிக் ராப் என்பவருக்குப் பதிலாக ஸ்டீபன் பார்க்லே பதவியேற்பார்.
தைவானின் தைபேய் நகரத்தில் இந்தியா-தைவான் சிறு, குறு நிறுவனங்களுக்கான வளர்ச்சி மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.