TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2018 2065 days 593 0
  • இந்திய குடிமைப்பணி அதிகாரியான ஜலால் ஸ்ரீவஸ்தவா இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (Inland Waterways Authority of India -IWAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். IWAI ஆனது மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
    • ஸ்ரீவஸ்தவா பெண்களுக்கான ‘ஷக்தி கேப்’ மற்றும் ‘உர்ஜா’ போன்ற திட்டங்களை அறிமுகப் படுத்தியமைக்காக புகழ் பெற்றவர் ஆவார்.
  • இஸ்ரேல் நாட்டின் இஸ்ரேல் வங்கியின் (இஸ்ரேலின் மத்திய வங்கி) ஆளுநராக அமீர் யாரோனை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவர் 2013-ல் முதல் பெண் ஆளுநராக பதவியேற்ற கர்னட் ஃபிளாக்கையடுத்து பதவியேற்கவுள்ளார்.
  • நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவானது மேற்கு வங்காளப் பணிநிலை பிரிவில் உள்ள இந்திய குடிமைப் பணி அதிகாரியான சுமந்தா சவுத்ரியை நிலக்கரித் துறையின் புதிய செயலாளராக நியமித்துள்ளது. இவர் இந்தர் ஜித் சிங்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி நிறுவன இயக்குநரான உப்மா சவுத்ரியை இளைஞர் விவகாரத் துறையின் செயலாளராக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்