பிரபல கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான M.H. அம்பரீஷ் நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக தனது 66 வயதில் பெங்களூருவில் 24 நவம்பர் 2018 அன்று காலமானார். இவர் ‘புரட்சி நடிகர்’ என பிரபலமாக அறியப்பட்டவராவார்.
ஈஸிஃபோன் பிராண்ட் கைபேசி தயாரிப்பு நிறுவனமான இநோவுஸ் (eNovus) என்ற நிறுவனமானது குழந்தைகள் பாதுகாப்பாகவும் பெற்றோருடன் இணைப்பில் இருக்கவும் உதவும் வகையில் இந்தியாவின் குழந்தைகளுக்கான முதல் கைபேசியான ஈஸிஃபோன் ஸ்டார் என்ற கைபேசியை வெளியிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட முன் உள்ளீடு செய்யப்பட்ட எண்களை மட்டுமே அழைக்கும் வசதி, GPS & SOS உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை இந்த கைபேசி கொண்டுள்ளது.
புனேயின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் ஒரே நேரத்தில் 60 விநாடிகளுக்கு 2353 பேர் அடிவயிற்றைப் பலகை நிலையில் வைத்து இருந்ததன் மூலம் (abdominal plank position) பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி குந்த்ரா இந்தியாவை புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க வைத்துள்ளார்.
இந்த சாதனையானது பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பஜாஜ் அலையன்ஸ் லைப் ப்ளாங்கத்தான்’ என்ற நிகழ்வின் கீழ் நடத்தப்பட்டது.