ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சரான டி. வி. சதானந்த கவுடா ஏற்றுள்ளார்.
அதன் அமைச்சராக இருந்த அனந்த குமாரின் இறப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி பதவியேற்றார், இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள 75 என்ற எண்ணிக்கைக்கு எதிராக 61 என்று உயர்ந்துள்ளது.
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞரான பத்ம ஸ்ரீ ஐராவதம் மகாதேவன் தனது 88-வது வயதில் நவம்பர் 26 அன்று சென்னையில் காலமானார்.