TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 1 , 2018 2058 days 610 0
  • மகாராஷ்டிராவின் மருத்துவக் கல்வி அமைச்சகமானது டாக்டர் ஜகன்நாத் தீக்சித்தை உடல் பருமன் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளது.
  • சப்ரோடோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியின் (இளையோர் சிறுவர் பிரிவு) 59வது பதிப்பில் ஆப்கானிஸ்தானின் அமினி பள்ளியைத் தோற்கடித்து வங்காள தேசத்தின் க்ரிதா சிக்சா புரோதிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
  • BFR ராக்கெட்டின் பெயரை ஸ்டார்ஷிப் என மாற்றுவதாக ஸ்பேஸ் X நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். BFR என்பது பெரிய ஃபால்கன் ராக்கெட் (Big Falcon Rocket) என்பதன் சுருக்கமாகும்.
  • டெல்லி பல்கலைக்கழகம், அயர்லாந்தின் டப்ளின் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (UK) ஆகியவற்றின் உயிரியலாளர்கள் வடகிழக்கு இந்தியாவின் இமய மலைப் பிராந்தியத்தில் கொம்புகளையுடைய 4 தவளையினங்களைக் கண்டறிந்துள்ளனர்.
    • இந்த உயிரியியலாளர்களின் குழுவில் இந்தியாவின் தவளை மனிதர் என அறியப்படும் S.D. பிஜுவும் உள்ளடங்குவார்.
  • தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) ஆனது அதன் வரவிருக்கும் 2020 ரோவர் திட்டத்திற்கு இறங்கும் தளமாக ஜெஸெரோ பள்ளத்தைத்  தேர்ந்தெடுத்துள்ளது.
    • இந்த ரோவர் திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • ஆஸ்திரேலியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தங்களது குடியேற்ற கொள்கைகளை வலுவற்றதாக மாற்றும் எனக் கருதி ஐ.நா.வின் புலம்பெயர்வு உடன்படிக்கையில் (UN pact on migration) கையெழுத்திட மறுத்துவிட்டன.
  • அமெரிக்காவின் உலகளாவிய சமூக ஆஸ்காரிடமிருந்து இந்திய அரசியலின் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதினை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார். இவர் வளர்ந்து வரும் இந்திய அரசியல்வாதி என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.
  • சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தியாகிகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் வெளியிட்டார். இந்தப் புத்தகமானது பணியில் இருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்