TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2018 2056 days 606 0
  • பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை தனது விளம்பரத் தூதுவராக அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளது. இந்நிறுவனமானது தனது தயாரிப்பிற்கான விளம்பரத் தூதுவராக பிரபலமான ஒருவரை நியமித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • அப்பல்லோ டயர் தவிர இந்தியாவில் BMW நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் டெண்டுல்கர் உள்ளார்.
  • ICC உலக T20 (ICC World T20) என்ற போட்டியின் பெயரை ICC T20 உலகக் கோப்பை (ICC T20 World Cup) என பெயர் மாற்றம் செய்துள்ளதாக சர்வதேச கிரிகெட் குழுமம் (ICC – International Cricket Council) அறிவித்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கும் இப்பெயர் பொருந்தும்.
  • கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரிடப்பட்ட இரண்டு விரைவு ரோந்துக் கப்பல்களான ICGS அம்ரித் கவுர் மற்றும் ICGS கமலா தேவி ஆகியவற்றை GRSE நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்