நாசாவின் ஓஸ்ரிஸ்-ரெக்ஸ் (Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer-OSIRIS-REx) விண்கலமானது பென்னு என்ற குறுங்கோளின் உட்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளது.
இது ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்திருக்கும் ஆப்ஹைட்ராக்ஸைல் மூலக்கூறுகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக பிரிஜ்ஜேந்திர பால் சிங்கை நியமித்துள்ளது.
இவர் கடந்த அக்டோபர் மாதம் பதவி விலகிய அனுபம் கேர்க்கு அடுத்ததாக பதவியேற்கிறார்.
நாடு முழுவதும் மின்னணு மருந்தகங்கள் மூலம் ஆன்லைனில் மருந்துகளை விற்க தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி V.K. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வானது இதனை அமல்படுத்த மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியானது இணைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது 1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் விதிக்கப்பட்டது.
உலகின் 5-வது இடத்திலுள்ள நவோமி ஒசாகா அணியின் பயிற்சியாளரான சஸ்சா பஜின், மகளிர் பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் (Women’s Tennis Association - WTA) ஆண்டிற்கான சிறந்த பயிற்சியாளர் பட்டம் வென்ற முதல் பயிற்சியாளராக ஆகியுள்ளார்.
இந்திய உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதிநிலைக்குரிய தொலைத் தொடர்பு சங்கமானது SBI-ன் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவை அதன் குழுவிற்கு புதிய தலைவராக நியமித்துள்ளது.
இவர் முன்னாள் வங்கியாளரான M.V. நாயரையடுத்துப் பதவியேற்கிறார்.