இஸ்ரேல் நாட்டின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்துள்ள சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகியுள்ளது. எனினும் சமாதானமான தீர்வு எட்டப்படும் வரை அதன் தூதரகமானது டெல் அவிவ் நகரிலிருந்து மாற்றப்பட மாட்டாது.
இந்திய காவல் பணி அதிகாரியான ராம்பால் பவார் தேசிய குற்ற ஆவண அமைப்பின் (National Crime Records Bureau-NCRB) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைச் செயலகத்தின் அசோக் குமார் தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் (National Commission for Scheduled Tribes-NCST) செயலராக பொறுப்பேற்றுள்ளார்.
டிசம்பர் 16 அன்று நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சியின்போது புதுடெல்லியில் உள்ள JLN விளையாட்டரங்கத்தில் தியாகிகள் மற்றும் போரில் காயமுற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ‘சோல்ஜரத்தான்’ எனும் சிறப்பு மாரத்தானை விளையாட்டுத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் துவங்கி வைத்தார்.
தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்குடைய வாடிக்கையாளர்களுக்கு இணையதள வசதியை இந்திய தபால் துறை துவங்கியுள்ளது.