பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு கோரி தீர்மானமொன்றை பஞ்சாப் சட்டசபையானது ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டின் அரசுகளுக்கிடையேயான இராணுவ தொழில்நுட்பக் கூட்டிணைவிற்கான ஆணையத்தின் (India-Russia Inter-Governmental Commission on Military Technical Cooperation-IRIGC - MTC) 18-வது கூடுகை புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரிகள் வாரியமானது பரிவர்த்தனை செலவினங்களைக் குறைப்பதற்கும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் வேண்டி அந்நிய செலவாணி மதிப்பிற்கான நாணயங்களின் பட்டியலில் கொரியாவின் ‘வோன்’ மற்றும் துருக்கியின் ‘லிரா’ ஆகியவற்றை சேர்த்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 4வது உலகளாவிய மருத்துவ உபகரணங்கள் மீதான ‘மருத்துவ உபகரணங்களின் அணுகலை அதிகரித்தல்’ என்ற கருத்தரங்கமானது ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச மெட்டெக் மண்டலத்தில் முடிவடைந்தது.
இந்த WHO-வின் உலகளாவிய மருத்துவ உபகரணங்கள் மீதான கருத்தரங்கமானது முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது.
மத்திய ஆற்றல் அமைச்சகமானது 2018 ஆம் ஆண்டின் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தையொட்டி (டிசம்பர் 14) புதுடெல்லியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட ஆற்றல் பாதுகாப்புக் குறியீடான “எகோ நிவாஸ் சம்ஹிதா 2018” என்பதை (ECO Niwas Samhita 2018) அறிமுகப்படுத்தியது.
வங்க தேச தலைநகரான டாக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் 2020 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆசிய கிரிக்கெட் குழுமமானது (ACC - Asian Cricket Council) வழங்கியுள்ளது.
கினியா (Guinea) குடியரசிற்கான புதிய இந்தியாவின் தூதுவராக T.C. பருபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தான்சானியாவின் சான்சிபாரில் இந்தியாவின் தூதராக உள்ளார்.
2016-17 செயலாக்க ஆண்டிற்கான நாட்டின் சிறந்த செயல்திறன் கொண்ட ஒருங்கிணைந்த எஃகு ஆலைக்கான பிரதமரின் கோப்பைக்கான வெற்றியாளராக டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த சிறப்பான விருதை 4 ஆண்டுகளாக தொடர்ந்து பெறும் நிறுவனமாக டாடா ஸ்டீல் மாறியுள்ளது.