TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2018 2166 days 672 0
  • சென்னையின் ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையானது டீசல்-மின்னாற்றல் மூலம் இயங்கக்கூடிய நாட்டின் முதலாவது தானியங்கி ஆய்வு வாகனத்தை வெளியிட்டுள்ளது.
    • பொதுவாக சோதனைகளை மேற்கொள்வதற்காக செலவு மிகுந்த மற்றும் அதிக நேர விரயம் ஆகக் கூடிய தனியான எஞ்சின் ஒன்று இதற்காக பயன்படுத்தப்படும்.
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் சமாதியான ‘சதாய்வ் அடல்’ ஆனது அவரின் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
  • சாஸ்திரா சீமா பால் (Sashastra Seema Bal-SSB) என்ற படைப் பிரிவின் 55-வது ஆண்டு விழா புதுடெல்லியின் கித்தோரினியில் உள்ள 25-வது படைப்பிரிவில் டிசம்பர் 24 அன்று கொண்டாடப்பட்டது.
  • மஹாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற 62-வது மகாராஷ்டிரா கேசரி மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த வீரரான பாலா ரபிக் ஷேக் புனேவின் அபிஜித் கட்கேயைத் தோற்கடித்து 2018 ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிரா கேசரி பட்டத்தை வென்றார்.
  • அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை துணைச் செயலரான பேட்ரிக் ஷனாஹான் 2019 ஜனவரி 1 முதல் தற்காலிக பாதுகாப்புத் துறை செயலராக பதவியேற்பார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • மத்திய பணியாளர் அமைச்சகமானது P.V பாரதியை கார்ப்பரேஷன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலராக 2019 பிப்ரவரி 01 முதல் அவர் ஓய்வு பெறும் நாளான 2020 மார்ச் 31 வரை நியமித்துள்ளது.
  • RBI ஆனது அதன் உயர்மட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக மூன்று ஆண்டு ஓய்வு காலத்தைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்த காலத்திற்கு முன்னதாக அவர்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் தலைவராகவோ அல்லது தலைமை செயல் அலுவலராகவோ பதவியேற்க முடியாது.
    • எந்தவொரு நிறுவனத்தின் குழுவின் இயக்குநராகவும் பதவியேற்க உள்ள ஒரு RBI அதிகாரிக்கு கட்டாய ஒரு வருட ஓய்வும் தொடர்ந்து செயல்பாட்டிலிருக்கும்.
  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையேயான முத்தரப்பு சபாஹார் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது ஈரானின் துறைமுக நகரமான சபாஹாரில் நடைபெற்றது.
  • மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகில் உள்ள யுரானின் கரான்ஜா கடற்படை நிலையத்தில் INHS சந்தானி என்ற 10வது கடற்படை மருத்துவமனை கப்பலை இந்தியக் கடற்படையானது செயல்நிலைப் படுத்தியுள்ளது.
  • புதுடெல்லியில் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையேயான பரிமாற்றம் மீதான இந்திய-சீன முதலாவது உயர்மட்ட சந்திப்பில் இந்திய - சீனத் திரைப்பட விழாவினை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சமானது ஏற்பாடு செய்திருந்தது.
  • புதுடெல்லியில் நடைபெற்ற 2018க்கான தேசிய ஆற்றல் சேமிப்பு விருதுகள் விழாவில் 17 விருதுகளை இந்திய ரயில்வே வென்றது.
    • ஒரே நிறுவனத்தால் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விருதுகள் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்