TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 27 , 2018 2032 days 577 0
  • சட்டத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகளானது மாணவர்கள் சேர்க்கைக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் (UIDAI - Unique Identification Authority of India) தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு கட்டாயமாக்குவது சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
  • மாநில அரசால் நடத்தப்படும் குழந்தைகள் நலனிற்கான நிறுவனங்களின் பெயர்கள் ஜகன்நாத் ஆசிரம் என பெயர் மாற்றப்படுவதாக ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
  • கணித வடிவியல் மற்றும் எண் கோட்பாடு ஆகியவற்றில் பிரம்மாண்டமான மற்றும் தொலைநோக்குடைய பங்களிப்பிற்காக யால் பல்கலைக்கழகத்தின் யிபெங்க் லியு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜாக் தோர்ன் ஆகிய 2 பேராசிரியர்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா- ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
  • வட சென்னையில் நோயாளிகளிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக வெறும் ரூ. 2 (பிறகு 5 ஆக உயர்த்தப்பட்டது) மட்டுமே பெற்றுச் சிகிச்சையளித்து வந்த மக்கள் மருத்துவர் (People's doctor) என்று அழைக்கப்படும் டாக்டர் S. ஜெயச்சந்திரன் வயது மூப்பு காரணமாக சமீபத்தில் காலமானார்.
    • உள்ளூர் மக்கள் இவரை 2 ரூபாய் டாக்டர் அல்லது ‘5 ரூபாய் டாக்டர்’ என அன்போடு அழைத்தனர்.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின்சார அளவீட்டுக் கருவியை (Electricity meters) உபயோகித்தலை மத்திய ஆற்றல் அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த மாற்றமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) endra நிறுவனமானது ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான பிஜய்குமாரை அதன் துணை நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
    • மேலும் இந்நிறுவனமானது N. சீனிவாசனை தனிச் சுதந்திரமுடைய இயக்குநராக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்