TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2018 2031 days 606 0
  • தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய முகாமில் இந்தியாவின் தலைமை குத்துச்சண்டை பயிற்சியாளராக துரோணாச்சர்யா விருது பெற்ற C.A குட்டப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் அனுபவமிக்க பயிற்சியாளரான S.R. சிங்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (Integrated Defense Staff-IDS) தலைமையகத்தின் 4 பிரிவுகளில் 3-ல் பணியாற்றிய விமானப்படை தளபதியான ராஜீவ் சச்தேவா ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் அமைப்பின் (செயல்பாட்டு பிரிவு) துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
  • மணிப்பூரின் முதல்வரான N. பீரேன் சிங்கிற்கு மாற்றத்திற்கான சாம்பியன் விருது குடியரசு துணைத் தலைவரால் டெல்லியில் வழங்கப்பட்டது. இவர் வடகிழக்கு மாநிலத்தில் ஆட்சி முறையை மாற்றியமைப்பதில் அவரின் தலைமைத்துவத்திற்காக இந்த அங்கீகாரத்தினைப் பெற்றார்.
  • இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசட் ஆனது மருத்துவத்திற்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நெதர்லாந்து மற்றும் கனடாவினையடுத்து தனது மருத்துவ குணமுள்ள கஞ்சாவை உலகளாவிய அளவில் வியாபாரத்தில் ஈடுபடுத்தும் 3-வது நாடாக இஸ்ரேல் ஆகியுள்ளது.
  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகா பழங்குடியின மக்கள் தங்களின் வருடாந்திர ஹெடையம்மன் திருவிழாவை டிசம்பர் 26 அன்று கொண்டாடினர்.
  • கர்ப்பிணிப் பெண்ணுக்கு கவனக் குறைவாக HIV தொற்றுடைய இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்கென மருத்துவ சேவையின் கூடுதல் இயக்குநரான Dr.S. மாதவியின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அரசு அமைத்திருக்கின்றது.
  • சென்னைத் துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன போக்குவரத்துக் கப்பல் முனையத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட முதல் சொகுசு கப்பலாக ‘MV லே லேபெரவுஸ்’ எனும் அதிநவீன போக்குவரத்து கப்பல் உருவெடுத்துள்ளது.
    • இது இந்த வருடத்தில் ரோமானியாவில் கட்டப்பட்ட இந்தக் கப்பலின் முதல் வருகையாகும்.
  • வட குஜராத்தின் மோடசா நகரில் உள்ள 16 வயது நிலான்ஷி படேல் என்ற சிறுமி 170.5 செ.மீ (5 அடி 7 அங்குலம்) நீளமுடைய தலைமுடியுடன் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
    • இதுவரை இந்த சாதனையானது 155.5 செ.மீ. நீள தலைமுடியுடைய 17 வயது கெய்டோ கவாஹாராவிடம் இருந்தது.
  • டிசம்பர் 25 ஆம் தேதியை கிறிஸ்துமஸ் தினத்திற்கான தேசிய விடுமுறை நாளாக ஈராக் நாட்டின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் தினமானது ஈராக்கின் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மட்டுமேயான மதம் சார்ந்த விடுமுறையாக மட்டுமே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்