நீதிபதி சாகரி பிரவீன் குமாரை ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இது வரும் 2019 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும்.
பூட்டானின் 12-வது 5 ஆண்டு திட்டத்திற்காக 4500 கோடி ரூபாயை நிதி உதவியாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் S-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ரஷ்யாவுடன் S-400 ஏவுகணைகளை வாங்குவதற்காக 2014-ல் அரசிற்கும் அரசிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட முதல் அயல்நாட்டு வாங்கும் நபர் சீனாவாகும்.
தென்கிழக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகிய பொறுப்புகளை கவனிக்கும் வாய்ப்பு அம்பிகா பிரசாத் பாண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மடகாஸ்கரின் முன்னாள் அதிபராக பதவி வகித்த மார்க் ராவலோமனானாவைத் தோற்கடித்து முன்னாள் தலைவரான ஆண்ட்ரி ராஜோலினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு துரிதமான வாக்கெடுப்பின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா தொடர்ந்து 11-வது ஆண்டாக அமெரிக்கர்களால் அதிகம் விரும்பப்படும் நபராக இடம் பிடித்துள்ளார். தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து 4-வது ஆண்டாக 2-வது இடத்தில் உள்ளார்.
முன்னாள் முதல் அமெரிக்க குடிமகளான மிச்செல் ஒபாமாவும் மிகவும் விரும்பப்படும் பெண்மணியாக அமெரிக்கர்களால் வாக்களிக்கப்பட்டுள்ளார்.
டீலாஜிக் என்ற நிறுவனத்தின் தரவுகளின் படி, இந்தியாவானது கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக அண்டை நாடான சீனாவை விட அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ஐ திருத்தம் செய்து உயர் பாதுகாப்புப் பதிவு எண் பலகையை (High Security Registration Plates-HSRP) 2019 ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கியுள்ளது.
பஞ்சாப் பிரிவினைக்கு ஆதரவான வன்முறைப் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக காலிஸ்தான் விடுதலைப் படையை (Khalistan Liberation Force-KLF) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act- UAPA) கீழ் அரசு தடை செய்துள்ளது
UAPA சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 40வது அமைப்பாக KLF உள்ளது.
நடிகரும் நாடகக் கலைஞருமான சீனு மோகன் சமீபத்தில் சென்னையில் காலமானார். இவர் 1979ல் நிறுவப்பட்ட கிரேஸி நாடகக் குழுவின் ஆரம்பக் காலத்திலிருந்தே அதன் உறுப்பினர் ஆவார்.