TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2018 2029 days 620 0
  • இந்தியப் பிரதமர் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் ராஜ்பார் சமூகத்தைச் சேர்ந்த மகாராஜா சுகல்தேவ் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டார்.
  • இணையவழிப் பாதுகாப்பின் பல்வேறு கூறுகள் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிவிப்பதற்காக “பள்ளிக் குழந்தைகளுக்கான இணையவழிப் பாதுகாப்புக் கையேடு” என்ற தலைப்பு கொண்ட சிற்றேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • டென்னிஸ் ஆஸ்திரேலியாவானது காற்றின் வெப்பநிலை, உமிழ்வு வெப்பம், ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றை அளவிடக்கூடிய புதிய “காற்று அழுத்த அளவுகோலை” மேம்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது
    • இது ஆஸ்திரேலியாவின் மெல்பெர்னில் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது பயன்படுத்தப்படவிருக்கிறது.
  • தற்பொழுது கென்யக் குடியரசிற்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றும் இந்திய அயலகப்பணி அதிகாரியான ராகுல் சப்ரா என்பவர் கூடுதல் பொறுப்பாக சோமாலிய கூட்டாட்சிக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நைரோபியில் இருந்த கொண்டே சோமாலிய கூட்டாட்சிக் குடியரசின் தூதராகவும் செயல்படுவார்.
  • தற்பொழுது கோட்டி டி ஐவரி குடியரசிற்கான இந்தியத் தூதராகப் பணியாற்றும் திரு. ஒய். கே. சாய்லாஸ் தங்கால் என்பவர் கூடுதல் பொறுப்பாக லைபிரியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அபித்ஜனில் இருந்து கொண்டே லைபிரியக் குடியரசின் தூதராகவும் செயல்படுவார்.
  • சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் மும்பையில் நடைபெற்ற 12-வது உலக சுகாதார நல மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இம்மாநாடானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இயற்பியலாளர்கள் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (NSAB - National Security Advisory Board) ஆகியவற்றினால் அமைக்கப்பட்ட ஹூடா குழுவானது கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதிகளில் தகவல் தொடர்பான போர்களுக்கான புதிய சிறப்புப் பிரிவுகளை உருவாக்க பரிந்துரை செய்துள்ளது.
  • தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய “Defying the Paradigm N Srinivasan: Fifty years of an extraordinary journey” என்ற தலைப்பு கொண்ட வரவேற்பறை புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்த புத்தகமானது கல்யாணி கேன்டாடி என்பவரால் எழுதப்பட்டது. மேலும் இதன் முதல் பிரதியானது கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனியால் பெற்றுக் கொள்ளப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான (ககன்யான்) ரூ.10,000 கோடி ரூபாய் நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்