தமிழக ஆளுநரால் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.
இவர் டாக்டர் கீதா லட்சுமிக்கு அடுத்து அப்பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணை வேந்தராகவும், அப்பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் நபராகவும் இருப்பார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கேடசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த நூலை வெளியிட்டார்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் ஆளும் கூட்டணியானது வெற்றி பெற்றதன் விளைவாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குப் பொறுப்பேற்க உள்ளார்.
ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 298 இடங்களில் 287 இடங்களை வென்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி வெறும் 7 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
20-வது சர்வதேச ஒட்டகத் திருவிழா ராஜஸ்தானின் பிகானிரில் ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் 56 சதவிகிதம் உயர்ந்து 2018 ஆம் ஆண்டில் 50 கோடி இணைப்புகளைத் தாண்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்ட இலக்குகளோடுப் பொருந்திப் போகும் வகையிலும் இருக்கின்றது.
டிராயின் சமீபத்திய தகவல்களின்படி 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 56 கோடி குறுகிய மற்றும் அகலக் கற்றை இணைய இணைப்புகள் உள்ளன.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நகர்ப்புற ஏழை மக்களின் நலனிற்காக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகரம்) என்ற திட்டத்தின் கீழ் கூடுதலாக அணுகிடத் தக்க வசதியில் 3,10,597 வீடுகளைக் கட்டி தருவதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
இந்த ஒப்புதலானது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் 41-வது கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
“இந்தியாவில் இருந்து சரக்கு ஏற்றுமதி திட்டம்” என்பதின் கீழ் வெங்காயங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி ஊக்கத் தொகையை விவசாயிகளின் நலன் கருதி தற்போதைய 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அரசு உயர்த்தியிருக்கின்றது. இது வெங்காயங்களுக்கு உள்ளூர் சந்தைகளில் சரியான விலை கிடைத்திட உதவிடும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றது. அதன்படி நேரடி இணையதள உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான விநியோகப்பாளர்கள் விநியோகச் சந்தையின் எந்த ஒரு பகுதியிலும் அவர்களால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்ய முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செயல்பட்டுவரும் 60 வர்த்தக வங்கிகளில், ஐசிஐசிஐ வங்கியானது கடந்த மூன்று வருடங்களில் வங்கி சொத்துக்களைக் களவாடிய வகையில் அதிகபட்ச ஊழியர்களை தண்டித்து இருக்கின்றது.
அறிவுசார் சொத்துரிமைக்கான மேல்முறையீட்டு மன்றம் பெருவின் தூதரகம் பதிவு செய்த அந்நாட்டு சாராய பானமான பிஸ்கோ என்பதின் மீதான புவிசார் குறியீட்டு விண்ணப்பமானது புவிசார் குறியீட்டுப் பதிவு முறைக்குத் தகுதியானது என்று தீர்ப்பளித்து இருக்கின்றது.
விருது பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இசைத் தொகுப்பாளரான நிதின் சாஹ்னி ஐக்கிய ராச்சியத்தின் வருடாந்திர புதுவருட சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் பல்வேறு துறைகளில் உயர் சாதனை புரிந்த 30 இந்திய வம்சாவளியினரில் முதன்மையாக இருக்கின்றார்.