TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 2 , 2019 2026 days 596 0
  • ஈரோடு மாவட்ட வனத்துறையும், தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் சங்கமும் இணைந்து முதல்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் பட்டாம்பூச்சிகள் மீதான கணக்கெடுப்பை மேற்கொண்டன.
    • இக்கணக்கெடுப்பு குழு 150 வகையான பட்டாம்பூச்சிகளையும், 241 வகையான பறவைகளையும் வனத்தினுள் அடையாளம் கண்டது.
  • ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் மேலும் ஆறுமாத காலத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இருக்கின்றது.
  • ஜப்பானின் நிதயுதவி நிறுவனமான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புடன் இந்திய அரசு 75 சதவிகித மெட்ரோ ரயில் வண்டிகளை இந்தியாவில் தனது சொந்தத் தொழிற்சாலையிலோ அல்லது இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்து இருக்கின்றது.
  • மத்திய தகவல் ஆணையத்தில் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா என்பவரையும் நான்கு புதிய தகவல் ஆணையர்களையும் மத்திய அரசு நியமித்து இருக்கின்றது.
  • அஸ்வானி லோகனி என்பவரின் ஓய்வைத் தொடர்ந்து மத்திய அரசானது ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக V.K. யாதவ் என்பவரை நியமித்து இருக்கின்றது.
  • சர்வதேச கிரிக்கெட் குழுமத்தால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா ஐசிசியின் ஆண்டிற்கான பெண் கிரிக்கெட் வீரராகவும் ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டிகளின் ஆண்டிற்கான வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற உலக துரித செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் 17/21 என்ற புள்ளிகளுடன் தனது சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் போலந்தின் கிராண்ட் மாஸ்டரான ஜன்-கிருசைஸ்டாப் ருடா என்பவரைத் தோற்கடித்தார். ஜப்பானிய அமெரிக்கரான ஹிகாரு நகாமுரா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
    • இந்த வெற்றியானது நார்வே வீரரின் 10-வது உலக அளவிலான அவரது வாழ்நாள் சாதனை வெற்றியாகும்.
  • வங்கதேச கிரிக்கெட் அணித் தலைவர் மஸ்ரப் மோர்தாசா அந்நாட்டின் 11-வது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டில் நடப்பில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்