P.K. ஸ்ரீவஸ்தாவின் பணி ஓய்வையடுத்து 1982 ஆண்டின் இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலைப் பணி (IOFS - Indian Ordnance Factories Service) அதிகாரியான சவுரப் குமார் பீரங்கித் தொழிற்சாலைகளின் பொது மேலாளராகவும் பீரங்கித் தொழிற்சாலை வாரியத்தின் தலைவராகவும் கொல்கத்தாவில் பதவியேற்றுள்ளார்.
இந்தியப் போட்டி ஆணையத்தின் செயலாளராக P.K. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிச் சேவைகள் துறையானது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹேமந்த் பார்கவாவை அந்நிறுவனத்தின் செயல் தலைவராக அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் நடைபெற்ற உலக நினைவுத் திறன் சாம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த 12 வயதான இந்திய வம்சாவழி மாணவரான துருவ் மனோஜ் 2 தங்கப் பதக்கங்களை வென்றார்.
IIT ரூர்க்கியின் பேராசிரியரான ஜெயந்தா குமார் கோஷ் தேசிய தொலையுணர் சங்கத்தினால் வழங்கப்படும் சிறப்பான செயலாக்கத்திற்கான 2017 ஆம் ஆண்டின் தேசிய புவி நிலப்பரப்பு விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதானது புவி நிலப்பரப்பு அறிவியல் மற்றும் அதன் பயன்பாடுகளின் வளர்ச்சிக்கான அவரின் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் உன்னதமான சேவைகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ‘Legion of Honour’ என்ற விருது புத்தாண்டில் கௌரவிக்கப்படுவோர் பட்டியலின்படி, கடந்த ஆண்டு குரோஷியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் கால்பந்தாட்ட அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 2-வது முறையாக உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றது.
வடக்கு கேரளாவின் காசர்கோடு பகுதியிலிருந்து தெற்கு முனையில் உள்ள மாவட்டமான திருவனந்தபுரம் வரை பாலின சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சி விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக கேரளா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் 620 கிமீ நீளமுள்ள மகளிர் சுவர் அல்லது வனிதா மதிலை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று அமைத்தனர்.
இந்திய வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 78 விக்கெட்டுகளை வீழ்த்தி 2018 ஆண்டில் சர்வதேச ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராகியுள்ளார்.
புகழ்பெற்ற ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழி எழுத்தாளரான மனோஜ் தாஸ், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பட்ட இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்கான கபி சாம்ராட் உபேந்திர பன்ஜா தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இது இந்தியாவின் 150வது டெஸ்ட் வெற்றியாக மாறியது.
இது ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் முதல் வெற்றியாகும்.