இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC – Indian Oil Corporation) ஆனது தமிழ்நாட்டின் எண்ணூரில் உள்ள அதன் ரூ 515 கோடி மதிப்புடைய முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி முனையத்தின் செயல்பாட்டினை அறிவித்துள்ளது.
இந்த LNG இறக்குமதி முனையமானது IOC ஆல் சொந்தமாகக் கட்டப்பட்ட முதல் இறக்குமதி முனையமாகும்.
குஜராத் கல்வி வாரியமானது குஜராத்தின் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேச பக்தியை வளர்ப்பதற்காக வகுப்புகளில் தங்கள் வருகைப் பதிவு அழைப்புகளுக்கு ‘உள்ளேன் அய்யா’ எனக் கூறுவதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ அல்லது ‘ஜெய்பாரத்’ எனக் கூற வேண்டுமென சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
விஜலாபுரம் கிராமத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குப்பம் விமான நிலைய ஓடுபாதைத் திட்டத்திற்கு ஆந்திர முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 100 ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் மட்டையாளராக இந்தியாவின் ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளார்.
நீதிபதி ஆசிப் சாயித் கோசா பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுள்ள தலைமை நீதிபதியான சாகிப் நிசார் என்பவருக்கு அடுத்துப் பதவியேற்கவுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக மயில்சாமி அண்ணாதுரையை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமானது அதி நவீன ஆயுதங்களுடன் கூடிய 6 குண்டு துளைக்காத வாகனங்களைப் பெற உள்ள முதல் விமான நிலையமாக மாற உள்ளது.
கோயம்புத்தூர் விழாவின் 11-வது பதிப்பானது ஜனவரி 03 அன்று கோயம்புத்தூர் வஉசி பூங்காவில் தொடங்கியது. ஒரு வாரக் காலத்திற்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியானது இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன் (YI – Young Indian) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இது ஜனவரி 12 வரை நடைபெறும்.