சென்னையில் நடைபெற்ற 13-வது நடனத் திருவிழாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரான சாந்தா தனஞ்செயன் என்பவருக்கு நிருத்ய கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
நாக்பூரிலுள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது பயன்பாடற்ற உலர் மின்கலங்களிலிருந்து உயர் மதிப்புடைய கிராபீன் என்பதைத் தயாரிக்க உதவும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
தகவல் தொடர்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இரயில்வே துறை ஆகியவற்றின் இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ராஜ்குமார் சுக்லாவின் நினைவு அஞ்சல் தலையை புதுடெல்லியில் வெளியிட்டார்.
HDFC பரஸ்பர நிதி ஆனது ICICI ப்ருடென்ஷியல் பரஸ்பர நிதியை முந்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பின் காரணமாக ஆப்கானிய குடிமக்களுக்கு வருகையின் பொழுது விசா வழங்கும் வசதியை பாகிஸ்தான் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகமானது தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிப்பதற்காக மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வாயேஜர் 1 & 2 ஆல் மதிப்பிடப்பட்ட அளவை விட அதிக விகிதத்தில் சனிக் கோளானது அதன் அடையாளச் சின்னமான வளையத்தை இழந்து வருவதை நாசாவின் புதிய ஆராய்ச்சியானது உறுதிபடுத்தியுள்ளது.
சனிக் கோளின் வளையமானது அதன் காந்தப் புலத்தினால் பனித் துகள்களின் தூசியான மழைத் துளி போல் சனிக் கோளின் ஈர்ப்பு விசையால் உள்ளே இழுக்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச அரசானது போலாவரம் திட்ட தளத்தில் முதலாவதும் ஒட்டுமொத்தத்தில் 41-வதுமான வட்ட வடிவ கதவைப் பொருத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டமானது 2019 மே மாதத்தில் முடிக்கப்படுமென்றும் 2019 டிசம்பரில் புவியீர்ப்பு முறையில் கால்வாய்களுக்கு நீர் திறக்கப்படுமென்றும் அரசு நம்புகிறது.
ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான தால் ஏரி முழுவதுமாக உறைந்துள்ளது. இந்நகரமானது சமீபத்தில் கடந்த 11 ஆண்டுகளில் குறைந்த பட்ச வெப்பநிலையாக மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்துள்ளது.
அஸ்ஸாம் உடன்படிக்கையின் பிரிவு VI ஐ அமல்படுத்துவதற்காக M.P பெஸ்பராவுவாவின் தலைமையின் கீழ் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவினை இந்திய அரசு அறிவித்துள்ளது.