இந்திய ரயில்வேயானது அனைத்து நீண்ட தூர இரயில் வண்டிகளிலும், நீண்ட கால நீடிப்புத் தன்மையை அல்லது குறைவான நொறுங்கும் தன்மையை ஏற்படுத்திட பழைய மரபுசார் இரயில் பெட்டிகளுக்குப் பதிலாக புதிய வடிவமைப்பிலான LHB (Linke Hofmann Busch) பெட்டிகளை மாற்றிட திட்டமிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது மனநல மருத்துவரான டாக்டர் ஜிதேந்திர நாக்பால் தலைமையில் ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் தற்கொலை மரணங்களுக்கான சூழல்களை ஆராய்வதற்காக ஒரு சிறப்புக் குழுவை ஏற்படுத்தியிருக்கின்றது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஊழியர்கள் பிரிவின் தலைமை அலுவலரான கெவின் ஸ்வீனி சமீபத்தில் தனது பதவியினை ராஜினாமா செய்திருக்கின்றார்.
ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் இரயில்வே நிலையம் தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் முதல் இரயில் நிலையமாக 100 அடி உயரமுடைய கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய நிலையமாகியிருக்கின்றது. இது இரயில்வே வாரியத்தின் ஆணையப்படி செய்யப்பட்டிருக்கின்றது.