TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2019 2150 days 646 0
  • சர்வதேச கிரிக்கெட் குழுமமானது சமீபத்தில் 105-வது உறுப்பினராக அமெரிக்காவை அறிவித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழும் என உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
  • ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வெளியிட்டுள்ள நீண்டகால கணிப்பு அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவானது அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய 2-வது பொருளாதாரமாகவும் சீனா முதலிடத்திலும் இருக்கும்.
  • அசாமில் வசிக்கும் கோச் ராஜ் போங்ஷி, தாய் அஹோம், சுதியா, மடாக், மெரான் மற்றும் டீ ஆகிய இனத்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உத்திரப் பிரதேசத்தில் உள்ள தீனதயாள் கால்நடை பல்கலைக்கழகமானது ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் திட்டத்தின் கீழ் முதலாவது ஆடு கருத்தரிப்பு ஆய்வகத்தினை அமைக்க முன்மொழிந்துள்ளது.
    • மேலும் இந்தப் பல்கலைக்கழகமானது சந்தைப்படுத்துதலுக்காக பிரதேஷிக் கூட்டுறவு பால்பொருட்கள் கூட்டமைப்புடன் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.
  • ஆண்டிற்கான வளர்ந்து வரும் ICC-ன் பெண் ஆட்டக்காரராக இங்கிலாந்து மகளிர் மட்டைப்பந்து அணியின் வீரரான சோபிக் எக்லெஸ்டோனும் ஆண்டிற்கான சிறந்த ICC-ன் மகளிர் ஒருநாள் ஆட்ட அணியின் தலைவராக நியூசிலாந்தின் வீரரான சூஸி பேட்ஸ்-ம் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்