TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 11 , 2019 2017 days 560 0
  • சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான மலாலா யூசப்சாய் தான் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தையும் அகதிகள் முகாமிற்குச் சென்றதையும் தொகுத்து ஒரு புதிய புத்தகமாக "We are displaced: My Journey and Stories from Refugee Girls Around the World" என்ற பெயரில் எழுதியுள்ளார்.
  • பீகாரின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அசுதோஷ் அமன் ரஞ்சி சீசனில் தனது 65-வது விக்கெட்டை வீழ்த்திய பின் அதிகபட்ச விக்கெட் எடுத்தவராக மிகப்பெரும் வீரர் பிஷன் சிங் பேடியை முந்தி சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
  • C. மேரிகோம் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் 45-48 கிலோகிராம் குறைந்த எடைப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • ஊடக அமைப்பு, ஊக்குவிப்பு மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியவற்றுக்கான செயலாக்க நடவடிக்கை குழுவானதும் பல்லூடக ஆலோசனை அமைப்புமான ஊடகச் சுதந்திரத்திற்கான கூட்டணி (Alliance for media freedom) என்ற அமைப்பின் தலைவராக THG பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவரான நரசிம்மன் ராம் எனப்படும் ராம் (இந்து குழுமம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன் முகநூல் (Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் அதிகாரப் பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.
  • பஞ்சாபில் நடைபெற்ற 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research and Development Organisation DRDO) "ஆண்டிற்கான சிறந்த பார்வையாளர்" என்ற விருதைப் பெற்றிருக்கின்றது.
  • சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி மூலதனச் சந்தையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைப் பற்றி ஆராய்ந்திடுவதற்கு உதவிடும் வகையில் ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கின்றது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழு சங்கர் தே என்பவரால் தலைமை தாங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்