மத்திய அமைச்சரவையானது வருமான வரித்துறையின் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் 2.0 என்ற திட்டத்தையும் ஒருங்கிணைந்த மின்னணு முறையில் தாக்கல் செய்யும் திட்டத்தையும் ஏற்படுத்த தனது ஒப்புதலை வழங்கியிருக்கின்றது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான 38 வயது நிரம்பிய K. தான்யா சணல் கேரளாவின் இரண்டாவது உயரமான சிகரமும் ஒரு பல்லுயிர்ப் பெருக்கத்தன்மை கொண்ட முக்கிய இடமுமான அகஸ்தியர் கூடம் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஆகியுள்ளார்.
இந்திய அமெரிக்கரான ராஜா கிருஷ்ணமூர்த்தி நுண்ணறிவுப் பிரிவுக்கான பாராளுமன்ற குழுவின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இதன்மூலம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பைப் பலப்படுவதற்கென்று அமைக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த குழுவில் பணியமர்த்தப்பட்ட முதல் தெற்காசிய நபராக அவர் ஆகியுள்ளார்.
தமிழ்நாட்டின் D. குகேஷ் தனது 12 வருடங்கள் 7 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் என்ற வயது நிலையில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டராகவும் இந்தியாவின் மிக இளைய வயது கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ளார். குகேஷ் இந்த சாதனையை தனது சக மாநிலத்தவரான R. பிரக்னனானந்தா என்பவரது சாதனையை வீழ்த்தி முத்திரைப் பதித்துள்ளார்.
செர்கே கர்ஜாகினுக்குப் பிறகு உலகில் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் தற்சமயம் குகேஷ் ஆவார்.
காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான முகமது அலி காமர் இந்தியப் பெண்கள் குத்துச் சண்டை அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்று இருக்கின்றார்.
இவர் மிகப்பெருமை வாய்ந்த சிவ் சிங் என்பவருக்குப் பதிலாக பதவியேற்கின்றார்.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிரிக்கெட் விளையாட்டிற்கான தமது பங்களிப்பிற்காக சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் கவுரவ உறுப்பினர் தகுதியைப் பெற்றனர்.
மாசிடோனியக் குடியரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் பெயரை வடக்கு மாசிடோனியக் குடியரசு என்று மாற்றிட வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு தற்சமயம் கிரீஸ் நாட்டின் பாராளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது.