தமிழ்நாடு முதல்வர் சென்னை தீவுத்திடலில் 45-வது சுற்றுலா மற்றும் தொழிற்துறை கண்காட்சியைத் துவக்கி வைத்தார். இது தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது.
சென்னை பறவைப் பந்தயத்தின் 12-வது பதிப்பு தமிழ்நாட்டின் சென்னையில் ஜனவரி 26-ம் தேதி அன்று நடைபெறும்.
உலகளாவிய வெப்பக் காற்று பலூன் திருவிழாவின் 5-வது பதிப்பான 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவானது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையின் உதவியுடன் குளோபல் மீடியா பாக்ஸ் மற்றும் thisispollachi.com ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக இது ஜனவரி 04 முதல் 06 வரை சென்னைக்கு அருகில் இருக்கும் செங்கல்பட்டில் உள்ள மகிந்திரா உலக நகரத்தில் நடத்தப்பட்டது. அதனையடுத்த கட்டத்தில் இது ஜனவரி 10 முதல் 16 வரை பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது. சென்னை தனது முதலாவது வெப்ப பலூன் திருவிழாவை கண்டுகளித்தது.
புதுச்சேரி முதல்வர் V. நாராயணசாமி 2019 ஆம் ஆண்டு மார்ச் 01-ம் தேதி முதல் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
முதல்முறையாக இந்திய விமானப்படையில் AN-32 என்ற போக்குவரத்து விமானம் நாட்டில் உள்ள உயரமான ஒரு விமானத் தளமான, கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிக்கிமின் பாக்யாங்க் என்னுமிடத்தில் வெற்றிகரமான தரையிறக்கத்தை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர்கள் K.M. நடராஜ் மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர் நியிமக்கப்பட்டு இருக்கின்றனர். இருவரும் 2020-ம் ஆண்டு ஜீன் 30-ம் தேதி வரை இப்பதவியில் இருப்பர்.
ஆந்திரப் பிரதேச மாநில அரசு தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் என்ற நோக்கில் விசாகப்பட்டினம் – சென்னை தொழிற்சாலை பெருவழிப் பாதை (Visakhapatnam-Chennai Industrial Corridor - VCIC) திட்டப்பகுதி ஒன்றின் கீழ் 1960 கோடி ரூபாய்கள் மதிப்பிற்கு சாலைத் தொடர்பு மற்றும் உபயோகம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு இருக்கின்றது.
இந்திய தேர்தல் ஆணையம் கோபால கிருஷ்ண திவேதி என்பவரை ஆந்திரப் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்திருக்கின்றது.
இவர் R.P. சிசோடியா என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்படுவார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் மூன்று நாள் திருவிழாவான 2019-ம் ஆண்டின் 10-வது இந்தியா ரப்பர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இந்த ரப்பர் கண்காட்சி ஆசியாவின் மிகப்பெரிய ரப்பர் கண்காட்சியாகும்.
குடியிருப்புப் பகுதிகளில் விதிகளுக்கு உட்படாமல் திறந்தவெளியில் எரித்தல், குப்பைகளைக் கொட்டுதல், சட்டவிரோதமாக நெகிழிப் பொருள் தொழிற்சாலையை நடத்துதல் ஆகிய செயல்களைப் புரிந்தமைக்காக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது (Central Pollution Control Board - CPCB) கிழக்கு டெல்லி மாநகராட்சிக் கழகம், தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகம் மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சிக் கழகம் ஆகிய மூன்று மாநகராட்சி அமைப்புகளுக்கும் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கின்றது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள GMC பாலயோகி விளையாட்டு மையத்தில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி மாணவர்களுக்காக 3 நாட்கள் நடைபெறும் முதலாவது தேசிய அளவிலான விளையாட்டுச் சந்திப்பு நடைபெற்றது.
மத்திய அமைச்சரவை இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் 6000 கோடி ரூபாய் முதலீட்டை உட்செலுத்துவதை அங்கீகரித்துள்ளது. இந்த மூலதன செலுத்துதல் இந்திய ஏற்றுமதிக்கும் மூலதன நிறைவு நிலையை அதிகப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் குழுமம் (International Cricket Council - ICC) தனது அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக மனு சாஹ்னி என்பவரை நியமித்திருப்பதாக அறிவித்திருக்கின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அகமது ஒரு போட்டியில் அதிக எண்ணிக்கையிலான கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் கேப்டனாக உருவெடுத்து ஒரு உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இச்சாதனை ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டெரர்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அவரால் மேற்கொள்ளப்பட்டது.