2019 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று நடைபெற இருக்கும் 16-வது டாடா மும்பை மாரத்தான் போட்டிக்கான நிகழ்ச்சித் தூதுவராக ஆறுமுறை உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியின் சாம்பியனும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான M.C. மேரி கோம் பெயரிடப்பட்டுள்ளார்.
இப்போட்டி புரோகேம் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட இருக்கின்றது.
நாட்டின் கிழக்கு முனைப் பகுதி முழுவதுமாக சீனாவின் ராணுவக் கட்டமைப்பு பற்றிய கவலைகள் அதிகரித்த போதிலும், மத்திய அரசு இந்திய திபெத் எல்லைக் காவல்படையின் யுக்தி சார்ந்த கட்டுப்பாட்டு முனையை தற்போது மையம் கொண்டுள்ள சண்டிகரிலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு மாற்றுவதற்கு ஆணையிட்டு இருக்கின்றது.
குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு மூன்றாவது மாநிலமாக உத்தரப் பிரதேசம் வேலை வாய்ப்பிலும் கல்வி நிலையங்களிலும் உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அங்கீகரித்திருக்கின்றது.
மத்திய சமூக நீதி மற்றும் அங்கீகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் துறை மும்பையில் உள்ள நேரு மையத்தில் "தீன்தயாள் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டம்" என்ற பெயரில் அமைந்த திட்டத்தின் மீதான இரண்டாவது பிராந்திய மாநாட்டை நடத்தியிருக்கின்றது.
புதுதில்லியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் ஒரு வருடாந்திர, அதி தீவிரமான, ஒரு மாத கால அளவிலான, மக்களை மையப்படுத்திய மிகப்பெரிய பரப்புரையான சாக்சம் என்பதின் 2019 ஆம் ஆண்டு பதிப்பு (பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின்) வெளியிடப்பட்டது.
2019-ம் ஆண்டின் AFC (ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு – Asian Football Federation) ஆசியக் கோப்பையில் இந்திய அணி வெளியேறியதற்குப் பிறகு இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் விலகியுள்ளார். இந்தியா சார்ஜா மைதானத்தில் பஹ்ரைன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
2005-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்றார். இது கான்ஸ்டான்டைனின் இரண்டாவது பதவிக் காலமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அரசிற்குச் சொந்தமான மகாராஷ்டிரா வங்கியின் மீது “உங்கள் வாடிக்கையாளரை அறியவும்” என்ற விதிமுறைகளையும் மோசடியாளர் வகைப்படுத்துதல் விதிமுறைகளையும் சரிவரப் பின்பற்றாத காரணத்திற்காக 1 கோடி ரூபாய் அபராதத் தொகையை விதித்திருக்கின்றது.
ஜப்பானின் குசிநோராபு தீவில் உள்ள ஒரு எரிமலை வெடித்திருக்கின்றது. இந்த வெடிப்பு ஷின்டாகி மலையின் மீது ஏற்பட்டிருக்கின்றது. 2015-ம் ஆண்டில் ஷிண்டாகிமலை வெடிப்பைக் கண்டிருக்கின்றது.
தைவானின் அதிபர் சாய் இங்-வென் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியின் கடும் தோல்விகளுக்குப் பிறகு நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சு செங்-சாங் என்பவரைப் பிரதமராக நியிமித்திருக்கின்றார்.