தெலுங்கானாவின் ஐதராபாத்தில் சமயோசித மற்றும் நீடித்த விவசாயத்திற்கான வேளாண் தீர்வை காணல் என்பதன் மீதான 2 நாட்கள் அக்ரி-விஷன் 2019 (Agri-Vision 2019) மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநில அரசானது பிஜு ஸ்வஸ்த்யா கல்யாண் திட்டத்தின் (Biju Swasthya Kalyan Yojana-BSKY) கீழ் இலவச மருத்துவ சேவைகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த அனைவருக்குமான இலவச மருத்துவ சேவையானது கிராமங்களில் உள்ள துணை மருத்துவ மையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கப்பெற்றது.
அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள சிப்பு ஆற்றின் மீது கட்டப்பட்ட 426 மீட்டர் நீளமுடைய டிஃப்போ பாலத்தை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார். இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாலமானது எல்லைப்பகுதி சாலைகள் நிறுவனத்தால் (Border Roads Organization) கட்டப்பட்டது.
இது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டது.