TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2019 2005 days 575 0
  • மத்திய அரசின் பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்றோர்க்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொது நல வழக்கை ஏற்றுக் கொண்ட முதல் நீதிமன்றமாக சென்னை உயர்நீதிமன்றம் ஆகியுள்ளது.
    • இந்த வழக்கானது மாநிலங்களவை உறுப்பினரும் திமுக ஒருங்கிணைப்புச் செயலாளருமான R.S பாரதியால் தாக்கல் செய்யப்பட்டது.
  • டெல்லி உயர்நீதிமன்றமானது 72 Hours – Martyr who never died எனும் திரைப்படத்தை வெளியிட அனுமதித்துள்ளது. இந்த திரைப்படமானது 1962 ஆம் ஆண்டு போர் நாயகனான ஜஸ்வந்த் சிங் ராவத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
    • 1962 ஆம் ஆண்டு போரின் போது இவர் புரிந்த வீரதீரச் செயலுக்காக அவரின் மறைவிற்குப் பின்னர் அவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
  • ஜெர்மனியில் முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவில் அறநெறியியலுக்காக ஒரு கல்வி நிறுவனமொன்றை அமைப்பதற்காக 7.5 மில்லியன் டாலரை நிதியுதவியாக முகநூல் நிறுவனம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்