TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2019 2135 days 629 0
  • நடக்கும் கடவுள் அல்லது நடீடாடுவா தேவரு என்று பிரபலமாக அறியப்படும் 111 வயதான, சித்தகங்கா மடத்தின் தலைவரான, ஒரு புகழ்பெற்ற லிங்காயத்தவரான சிவக்குமார சுவாமி கர்நாடகாவின் தும்கூருவில் உள்ள மடத்தில் ஜனவரி 21-ம் தேதியன்று காலமானார்.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியன்று லக்னோவில் "UP DIWAS" என்ற பெயரில் உத்தரப் பிரதேசம் தனது 69-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. முன்னதாக ஒன்றுபட்ட மாகாணம் என்று அறியப்பட்டு, பின்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியன்று உத்தரப் பிரதேசம் என்ற அதன் பெயரை அம்மாநிலம் பெற்றது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் உள்ள ஒரு வியாபாரிக்கும் தெலுங்கானாவின் கத்வால் சந்தையில் இருக்கும் ஒரு விவசாயிக்கும் இடையே 8.46 குவிண்டால் நிலக்கடலை மீதான வர்த்தகமானது ஜனவரி 19 அன்று முதல்முறையாக மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகமாக மின்னணு தேசிய விவசாயச் சந்தை (electronic National Agriculture Market/eNAM) மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India) டென் நெட்வொர்க்ஸ், ஹாத்வே மற்றும் டாடாகாம் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்திட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதலை அளித்திருக்கின்றது.
    • ரிலையன்ஸ் நிறுவனம் டென் நிறுவனத்தில் 66 சதவிகிதத்தையும், ஹாத்வே நிறுவனத்தில் 51.3 சதவிகிதத்தையும் கையகப்படுத்தியது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் பியூஸ் கோயலை இடைக்கால நிதியமைச்சராகவும் பெருநிறுவன அமைச்சராகவும் நியமித்தார். இதற்கான காரணம் அருண் ஜெட்லி உடல் நலம் தொடர்பான விவகாரங்கள் ஆகும். பியூஸ் கோயலின் இடைக்கால நிதி மந்திரிக்கான பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை தொடரும்.
    • பியூஸ் கோயலுக்கு நிதியமைச்சகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • சமீபத்தில் பால் காமா தீயிபாவும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்த காரணத்திற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பசோவின் குடியரசுத் தலைவர் கிறிஸ்டோபி ஜோல்மேரி டாபிரி என்பவரை புதிய பிரதமராக நியமித்திருக்கின்றார்.
  • கேரள எழுத்தறிவுத் திட்டத்தின் அக்சர லட்சம் (மில்லியன் எழுத்துக்கள்) எழுத்தறிவுத் தேர்வில் முதலிடம் பிடித்த கேரளாவைச் சேர்ந்த 96 வயதான கார்த்தாயாயினி அம்மா சமீபத்தில் காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
    • காமன் வெல்த்தின் கற்பதற்கான திட்டம் தனது உறுப்பு நாடுகளில் தொலைத் தூரக் கல்வியை மேம்படுத்திட திட்டமிட்டிருக்கின்றது.
  • கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய காவல்துறை அதிகாரி மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரி அபர்ணா குமார் உலகின் கடைக்கோடி தென் பகுதியான அண்டார்டிகாவில் அமைந்துள்ள தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்த முதல் பெண்மணியாக சாதனை படைத்திருக்கின்றார்.
    • தென் துருவம் என்பது உலகின் மிகவும் குளிரான மற்றும் மிகவும் வறண்ட பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்