TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 26 , 2019 2002 days 579 0
  • ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தனித்தனிப் பருவங்களில் 1,000 ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை மூத்த கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் படைத்துள்ளார். இவர் முதல் வகுப்புப் போட்டியில் 1996-1997 காலத்தில் அறிமுகமானார்.
    • மேலும் இவர் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் அதிக முறை சிறந்த ஆட்டக்காரர் விருதினையும் பெற்றுள்ளார்.
  • அனைவருக்குமான அடிப்படை வருமான திட்டத்திற்குப் பதிலாக விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு அவர்களுக்கு நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டத்தினை தேர்வு செய்யுமாறு அரசாங்கத்திற்கு SBI Ecowrap (SBI Ecowrap) அறிக்கையானது பரிந்துரை செய்துள்ளது.
  • உலகளாவிய சரக்குப் பெட்டகங்களை கையாளும் முன்னணி 100 துறைமுகங்கள் அறிக்கையின் முதல் 30 துறைமுகங்களில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்துள்ள ஒரே துறைமுகமாக இந்தியாவின் முன்னணித் துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுக அமைப்பு (Jawaharlal Nehru Port Trust-JNPT) ஆகியுள்ளது.
    • இதன் முந்தைய தரவரிசைகளுடன் ஒப்பிடுகையில் JNPT ஆனது 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்