பாதுகாப்பு அமைச்சகமானது 70-வது குடியரசு தினத்தில் RDP இந்தியா 2019 எனும் கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ராஜ பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் சிறப்பம்சங்களைப் பார்க்க முடியும்.
இந்த முன்முயற்சியானது அரசின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்துடன் ஒத்திசைந்துள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் இணைந்து ஜப்பானின் யோகோகாமா கடற்கரைப் பகுதியில் பேரிடர் கட்டுப்பாடு, தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியினை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டுக் கப்பல்களுடன் இந்தியா இப்பயிற்சியை நடத்தியது. இந்த ஆண்டு ஜப்பான் இப்பயிற்சியை நடத்துகிறது.
ICGS ஷவ்னாக் இந்த ஒத்திகையில் பங்கேற்கும் பிரதான இந்தியக் கப்பல் ஆகும்.