நாட்டுப்பற்று மற்றும் தேச கட்டமைப்பு மீதான தேசிய அளவிலான பேச்சுப் போட்டியை மத்திய அமைச்சரான ராஜ்ய வர்த்தன் ரத்தோர் தொடங்கி வைத்தார். இது இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நேரு யுவ கேந்திரா சங்கதன் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமஸ்கிருத மொழிச் சொல்லிருந்துப் பெறப்பட்ட “நாரி சக்தி” எனும் சொல்லானது 2018 ஆம் ஆண்டிற்கான இந்தி மொழிச் சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பெண்களின் சக்தி (women empowerment) என்று பொருள்படும்.
வரலாற்று சிறப்புமிக்க திக்கி அரண்மனையானது 5 நாட்கள் நடைபெறும் 12-வது ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவை நடத்துகிறது. இந்த திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறும் வருடாந்திர இலக்கியத் திருவிழாவாகும்.
2006-ல் தொடங்கப்பட்ட இத்திருவிழாவானது 2008 ஆம் ஆண்டிலிருந்து டீம்ஓர்க்ஸ் ஆர்ட்ஸ் (Teamwork Arts) என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.