TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 29 , 2019 1999 days 590 0
  • பாகிஸ்தான் அரசானது கரும்புச் சாற்றை நாட்டின் தேசிய பானமாக அறிவித்துள்ளது. ஆரஞ்சு, கேரட் மற்றும் கரும்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு சுட்டுரையில் மக்களிடம் கேட்டுக் கொண்ட பின்னர் அவர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
  • அஸ்ஸாம் அரசானது மூத்த பத்திரிக்கையாளரும் முன்னாள் பத்திரிக்கை ஆசிரியருமான தீரேந்திர நாத் சக்ராபோர்ட்டிக்கு 2018 ஆம் ஆண்டுக்கான குடியரசு தின பத்திரிக்கை விருதினை வழங்கியுள்ளது.
  • கோவாவின் பனாஜியில் உள்ள மாண்டோவி ஆற்றின் குறுக்கே 5.1 கி.மீ. நீளமுடைய  3-வது கம்பி வடத்திலான 'அடல் சேது' எனும் பாலத்தினை மத்திய அமைச்சரான நிதின் கட்காரி சமீபத்தில் திறந்து வைத்தார்.
  • 2019 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதலில் இந்தியாவானது இராணுவ செயற்கைக் கோளான மைக்ரோசாப்ட்-R மற்றும் கலாம்சாட் ஆகியவற்றை துருவ செலுத்து வாகனமான PSLV C44 மூலம் செலுத்தியுள்ளது.
  • இந்திய கூட்டுறவுப் பால் நிறுவனமான அமுல் முதன்முறையாக ஒட்டகப் பாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமுல் ஒட்டகப் பால் என்ற பெயரில் குஜாத்தின் காந்திநகர், அகமதாபாத் மற்றும் கட்ச் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்