இந்தியாவில் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான “ரயில் 18” ஆனது “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” எனப் பெயரிடப்பட்டு டெல்லி மற்றும் வாரனாசிக்கு இடையே இயக்கப்படுகிறது. “ரயில் 18” ஆனது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னையின் ஐ.சி.எப்-இல் உருவாக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த இரயிலாகும்.
நேபாளத்தின் ரோஷித் பவுடேல் சச்சினின் சாதனையை (16 வருடம் மற்றும் 213 நாட்கள்) முறியடித்து இளம் வயதில் ஐம்பது ரன்களை கடந்த முதல் வீரராக (16 வருடம் மற்றும் 146 நாட்கள்) ஆகியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO – World Health Organization) தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியத் தலைவராக டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் இரண்டாவது ஐந்து ஆண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் WHO-ன் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்குத் தலைவரான முதல் பெண்மணி ஆவார்.
IRCTC-யின் இரயில்களின் தூய்மைத் தன்மை ஆய்வின்படி, தெற்கு இரயில்வேயானது நாட்டின் தூய்மையான இரயில் நிலையங்களில் முதலிடம் வகிக்கின்றது.
தூரந்தோ ரயில்களானது உயர் மதிப்புடைய ரயில்களில் குறைந்த தூய்மையுடன் உள்ளன. அதே வேளையில் தேஜாஸ் மற்றும் சதாப்தி ஆகிய இரயில்கள் மிகவும் தூய்மையானதாக உள்ளன.
ஆண்ட்ரி மேகின் எழுதிய லா வி டி’உன் ஹோம் இன்கோன்னு (Andrei Makine’s “La vie d’un homme inconnu” - தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழிபெயர்ப்பிற்காக ரோமைன் ரோலண்ட் புத்தகப் பரிசினை வென்றுள்ளது.
இந்த புத்தகமானது R. கிச்சின மூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டது.