TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 31 , 2019 2129 days 634 0
  • ஜனவரி 29 அன்று “பரிக்சா பே சர்ச்சா 2.0” என்பதின் இரண்டாம் பதிப்பானது டெல்லியின் தல்கட்டோரா அரங்கில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் தேர்வு கால மன அழுத்தத்தை கையாளுவது குறித்துப் பிரதமர் கலந்துரையாடினார்.
  • பிரதமர் சமீபத்தில் செங்கோட்டை வளாகத்தின் உள்ளே கீழ்க்காண்பனவற்றை திறந்து வைத்தார்.
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம்
  • யாத்-இ-ஜாலியன் அருங்காட்சியகம் (ஜாலியன் வாலாபாக் மற்றும் முதலாம் உலகப் போர் சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம்)
  • 1857ன் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் குறித்த அருங்காட்சியகம்
  • திரிஷ்யகலா இந்திய கலைகள் அருங்காட்சியகம்
  • ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளராக இந்தியாவின் முகமது சமி ஆகியுள்ளார். இவர் இந்த சாதனையை 56 போட்டிகளில் அடைந்துள்ளார்.
  • முன்னதாக 59 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இர்பான் பதான் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
  • தென்னாப்பிரிக்காவின் அதிபரான சிரில் ரமாபோசா புதுடெல்லியில் IBSA (India-Brazil-South Africa) அமைப்பின் முதலாவது காந்தி-மண்டேலா நினைவு கருத்தரங்க சுதந்திர உரை நிகழ்வில் தனது உரையாடலை வெளிப்படுத்தினார் .
  • உத்தரகாண்ட் அரசானது 50 கோடி செலவில் பித்தோர்கார் மாவட்டத்தில் துலிப் தோட்டத்தை உருவாக்க அனுமதி பெற்றுள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு அடுத்து நாட்டில் இரண்டாவதாக அமைய உள்ள துலிப் தோட்டமாகும்.
  • இந்த துலிப் தோட்டமானது ONGC நிறுவனத்தால் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது.
  • காப்பீட்டு ஒழுங்குபடுத்துனரான IRDAI (Insurance Regulatory and Development Authority) ஆனது உள்நாட்டில் உள்ள முறையான மற்றும் முக்கியமான காப்பீட்டு நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இந்திய வர்த்தக சபையானது நீடித்த சுற்றுச்சூழல் பிரிவில் சமூகத் தாக்கத்திற்கான விருதினை உலகின் முன்னணி பொதி கட்டுதல் மற்றும் செயலாக்கத் தீர்வு நிறுவனமான டெட்ரா பேக் இந்தியா என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
  • நீடித்த சூழலியலை வழங்குவதற்காக டெட்ரா பேக் அமைப்பால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்த விருதானது அங்கீகரிக்கின்றது.
  • M.S. சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை அறிமுகப்படுத்த டெல்லி அரசானது முடிவு செய்துள்ளது.
  • M.S. சுவாமிநாதன் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையமானது 2004 நவம்பர் 18 அன்று அமைக்கப்பட்டது.
  • நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை வகிக்கும் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்தியாவில் தேசிய சுற்றுலாத் தினமானது வருடந்தோறும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது.
  • ஜனவரி 29 அன்று டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் நடைபெற்ற “படைகள் பணிக்கு திரும்புதல் நிகழ்ச்சி” 4 நாட்கள் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டத்தின் உச்சக் கட்டத்தினைக் குறிக்கின்றது.
  • மகாத்மா காந்தி மறைவின் நினைவு தினத்தைக் குறிக்கும் பொருட்டு வருடந்தோறும் ஜனவரி 30 அன்று தேசிய தியாகிகள் தினம் அல்லது சர்வோதயா தினம் அனுசரிக்கப்பட்டது.
  • முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) நீண்டகால உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் 1998 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராக தனது பதவிக் காலத்தில் இவர் 1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்