TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 1 , 2019 1996 days 558 0
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவின் மத்திய வங்கிகள் ஆகிய நாடுகள் இணைந்து சுபேர் என்ற ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை வெளியிட இருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையே தொடர் சங்கிலி மற்றும் விநியோகிக்கப்படும் பேரேடுத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற நிதியியல் தீர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
  • வயநாடு மாவட்ட நிர்வாகம் வயநாட்டில் குரங்குக் காய்ச்சல் என்றுஅழைக்கப்படும் கியாசானூர் காட்டு நோய்கள் (Kyasanur Forest Disease - KDF) இருவருக்கு இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
    • இந்த வைரசானது பொதுவாக குரங்குகளில் காணப்படும் ஒட்டுண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும்.
  • மூத்த வெளியுறவுத் துறை அதிகாரியான சஞ்சய் சுதிர் மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மூத்த அரசுத் துறை அதிகாரியான ராஜீவ் நயன் சௌபே மத்தியப் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Union Public Service Commission - UPSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தலைவர் அரவிந்த் சக்சேனா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்