சமீபத்திய தரவரிசைப்படி, மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரம் (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission - DAY-NULM) என்ற சுயவேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாடு 18-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 27 மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசமும் குஜராத்தும் முதல் இரு இடங்களை வகிக்கின்றன.
கடந்த வருடம் இதே பிரிவில் தமிழ்நாடு 4-வது நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தியக் கடற்படையின் 75(I) என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரித்திட பாதுகாப்பு கொள்முதல் குழு (Defence Acquisition Council - DAC) ஒப்புதல் அளித்திருக்கின்றது.
தேசிய மாணவர் படையின் இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பதவியேற்றுள்ளார்.
புதுதில்லியில் நொய்டாவில் தேசிய அருங்காட்சியக கல்வி நிலையத்திற்கான புதிய வளாகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியின் 3-வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி துவக்கி வைக்கப்பட இருக்கின்றது.
தேசிய பேரிடர் பதிலெதிர்ப்பு நிதியில் (National Disaster Response Fund - NDRF) இருந்து 6 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்திற்கு 7214.03 கோடிகள் அளவிற்கு கூடுதல் மத்திய அரசு நிதியை அளித்திடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
உதவியளிக்கப்படும் மாநிலங்கள் இமாச்சலப்பிரதேசம், (வெள்ளம் மற்றும் நிலச்சரிவு) ஆந்திரப் பிரதேசம் (வறட்சி), குஜராத் (வறட்சி), கர்நாடகா (வறட்சி), மகாராஷ்டிரா (வறட்சி) மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி (சூறாவளி).
பிரதமர் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில் உள்ள தண்டியில் தேசிய உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும் அவர் அந்த நினைவிட வளாகத்தில், 1930 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியுடன் நடந்த 80 சத்தியாகிரகிகளின் சிலைகளை காந்தி சிலையோடு சேர்த்துத் திறந்து வைத்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பாரத் பார்வ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் முடிவிற்கு வந்தது.
இந்நிகழ்ச்சி தேசபக்த உணர்வை ஏற்படுத்தவும் நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையை மேம்படுத்திடவும் எண்ணுகின்றது.
அமெரிக்காவின் நியூயாக்கில் சமீபத்தில் முடிவுற்ற மிகப்பெரிய பயணக் கண்காட்சியான நியூயார்க் டைம்ஸ் பயணக் கண்காட்சி 2019ல் சிறந்த கண்காட்சிக்காக இந்தியா சிறப்பு விருதினைப் பெற்றது.