TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 4 , 2019 2125 days 599 0
  • திருவனந்தபுரத்தின் தும்பாவிலிருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் உருவாக்கப்பட்ட லித்தியம் அயன் மின்கலத் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வதற்காக 141 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 10 நிறுவனங்களை நிதி ஆயோக்குடன் கலந்தாலோசனை செய்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  (Indian Space Research Organization - ISRO) தேர்ந்தெடுத்திருக்கின்றது.
    • இந்த லித்தியம் அயன் மின்கலன்கள் உண்மையில் செயற்கைக் கோள்களிலும் ஏவு வாகனங்களிலும் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
  • சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund) அதிகரிக்கும் வர்த்தக உரசல்கள் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க வட்டி விகிதங்களைக் காரணம் காட்டி இந்த வருடம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான தனது கணிப்பைக் குறைத்திருக்கின்றது. தனது உலகப் பொருளாதாரப் பார்வையில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2019 ஆம் வருடம் 3.5 சதவிகிதம் வளருமென்றும் 2020-ம் வருடம் 3.6 சதவிகிதம் வளருமென்றும் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்திருக்கின்றது.
    • இது கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட முறையே 0.2 மற்றும் 0.1 சதவிகிதம் குறைவாகும்.
  • உலக எஃகு உற்பத்தியாளர்கள் அறிக்கையின்படி, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றது.
    • 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் எஃகு உற்பத்தி 106.5 மில்லியன் டன்களாகும். இது 2017 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்த 101.5 மில்லியன் டன்களிலிருந்து 4.9 சதவிகிதம் அதிகமானதாகும்.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது தற்சமயம் அர்ஜென்டினாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வரும் 1993 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான சஞ்சீவ் ரஞ்சன் என்பவரை கொலம்பியக் குடியரசிற்கான புதிய தூதுவராக நியமித்திருக்கின்றது.
  • உள்நாட்டிலேயே மின் வாகனங்களைப் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மின்சார  வாகனங்களின் உதிரிபாகங்களின் மீதான இறக்குமதி வரியை 15 - 30 என்ற சதவிகிதத்திலிருந்து 10 - 15 என்ற சதவிகிதமாக அரசு குறைத்திருக்கின்றது.
    • இந்த வரிக் குறைப்பானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
  • நியூசிலாந்திற்கு எதிரான 3-வது மற்றும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான 36 வயது  மித்தாலி ராஜ் 200வது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் வீரராகியுள்ளார்.
  • கோல்ப் வீரர் வாணி கபூர் ஆஸ்திரேலியப் பெண்கள் PGA சுற்றுப் பயணக் கோப்பையைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரராகியுள்ளார். இது ஆஸ்திரேலியாவில் பல்லாரட் கோல்ப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவதான தகுதிச் சுற்றுப் போட்டியில் மற்ற மூன்று நபர்களுடன் அவர் வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை முடித்து 12-வது இடத்தைக் கைப்பற்றியதால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்