பஞ்சாப் அரசாங்கம் அடிப்படைத் தேவைகள் மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கு “பொலிவுறு கிராமத் திட்டம்” என்ற பெயரில் 384.40 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒரு ஊரக மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
இத்திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் மற்றும் 14-வது நிதி ஆணையம் ஆகியவற்றிடமிருந்து நிதிகள் பெற்று நிதியுதவி அளிக்கப்படும்.
இந்தியாவிற்கு நடுத்தர வகையைச் சேர்ந்த தரையிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் கடற்படை ஏவுகணை ஒன்றை அளிக்க இஸ்ரேல் விமானப்படைத் தொழிற்சாலை, இந்தியக் கடற்படை, கொச்சின் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ராணுவத்தின் பல்மருத்துவப் படைப்பிரிவு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 78-வது படைப் பிரிவின் நிறுவன தினத்தைக் கொண்டாடியது.