TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2019 1992 days 551 0
  • கடந்த வருட ஒதுக்கீடான 2.98 லட்சம் கோடிகளோடு ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையானது பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகளை 6.87 சதவிகித அளவிற்கு அதிகமாக 3.18 லட்சம் கோடிகள் வரை ஒதுக்கியிருக்கின்றது.
  • மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டுறவுச் சங்கங்கள் துறையானது மகாராஷ்டிராவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையேயான விவசாய வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் ஆறு பெரிய நகரங்களில் மேலாளர்களை நியமிக்க முடிவெடுத்திருக்கின்றது.
  • 2016 குடிமகன் (திருத்தச் சட்டம்) மசோதாவிற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மணிப்பூர் திரைப்பட இயக்குநர் அரிபம் ஷியாம் 2006 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளித்தார்.
    • மணிப்பூரித் திரை உலகிற்கும் உலகத் திரைப்படங்களுக்கும் அவரது பங்களிப்பிற்காக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் பத்மஸ்ரீ விருதை அவருக்கு அளித்தார்.
  • கல்வி முறையை மேம்படுத்துவதற்காக சிக்கிம் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறையானது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இருக்கின்றது.
  • பேஸ்புக்கிற்குச் சொந்தமான (முகநூல்) தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் (புலனம்) நிறுவனம் இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்க “ஸ்டார்ட் அப் இந்தியா- வாட்ஸ்அப் மிகப்பெரும் சவால்” என்ற போட்டியை அறிவித்திருக்கின்றது.
  • இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆட்டமிழக்காமல் அடித்த 90 ரன்களுக்காகவும், தனது நான்காவது ஒருநாள் சதத்தை அடித்ததற்காகவும் பெண்கள் மட்டையாளர்களுக்கான  ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார்.
    • அவர் முதலிடத்தைப் பிடிப்பதற்காக மூன்று இடங்கள் முன்னேறியிருக்கின்றார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்களான எலிஸ் பேரியும் மேக் லேனிங்கும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்