தமிழ்நாடு அரசு பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை 30வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
இந்த வருடத்திற்கான (2019) கருத்துரு “சாலைப் பாதுகாப்பு - உயிர்ப் பாதுகாப்பு“ என்பதாகும்.
பிப்ரவரி 20 முதல் 24 வரை பெங்களூருவில் உள்ள எலஹாங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பான ஏரோ இந்தியா 2019 நடத்தப்பட இருக்கின்றது.
சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் வியாபார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இது ஒரு முக்கியமான நடைமுறையை ஏற்படுத்த எண்ணுகின்றது.
மாநில கூட்டுறவுச் சங்கமான ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாலை கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் தமிழ்நாடு பால்வளத் துறை அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக இது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொச்சி மாநகர காவல்துறையானது கொச்சியில் ரௌடிக் கும்பல், தீய சமூக சக்திகள் மற்றும் போதை மருந்துகள் கும்பல் ஆகியோரின் நடவடிக்கைகளை ஒழிக்க ‘உடைந்த சாளர நடவடிக்கை‘ என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.
பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்பதில் இந்தியாவின் ஏழாவது மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்து இருக்கின்றது.
இந்த இட ஒதுக்கீட்டை குஜராத் முதலில் அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியிருக்கின்றன.
பிப்ரவரி 1 முதல் 3 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 2வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட திருவிழாவானது ஒரு அரசு சாரா அமைப்பான நவபாரத் நிர்மாண் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு 5 லட்ச ரூபாய் தொகையுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரசு அமீரகத்தின் “சகிப்புத் தன்மைக்கான வருடத்தின்“ துவக்க விழாவைத் துவக்கி வைப்பதற்காக போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு கத்தோலிக்க தேவாலய தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நூறு T20 போட்டிகளில் விளையாடிய முதல் ஆசியப் பெண்மணியாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரான சனா மீர் உருவெடுத்து இருக்கின்றார்.
உலகில் இப்பெருமையை அடையும் 6வது பெண்மணி இவராவார். மேலும் இப்பட்டியலில் 110 டி20 போட்டிகளில் விளையாடிய வகையில் மேற்கு இந்தியத் தீவுகளின் தியேந்திர டோட்டின் முன்னணியில் இருக்கின்றார்.