இந்திய அரசின் முன்னாள் செயலாளரான P.S. கிருஷ்ணன் என்பவர் 2018-ம் ஆண்டிற்கான சமுக நீதிக்கான K.வீரமணி விருது வழங்கப்படவுள்ளார்.
மும்பையில் ஜவுளித்துறை அமைச்சகம் ‘டெக்னோ டெக்ஸ் 2019’ என்ற ஜவுளித்துறை தொழில்நுட்பங்கள் மீதான தேசிய மாநாட்டை நடத்தியிருக்கின்றது.
ஆயுஷ்மான் பாரத் என்று பிரபலமாக அறியப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டமானது புது தில்லியில் PM-JAY என்ற செயலியை வெளியிட்டது.
தற்சமயம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சஞ்சய் சுதிர் மாலத்தீவுகள் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்தத் தூதராக நியமிக்கப் பட்டிருக்கின்றார்.
சபரிமலைக் கோவிலில் பெண்கள் செல்வது தொடர்பான சீராய்வு மனுக்களின் பட்டியல் மீது தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது அதேசமயம் திருவாங்கூர் கோவில்மன்றம் சபரிமலைக் கோவிலினுள் அனைத்து வயதுப் பெண்களும் உள்ளே வருவதற்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தால் (Ministry of Micro, Small and Medium Enterprises - MSME) மினிரத்னா என்ற பிரிவில் வெற்றியாளராக இந்தியாவின் தேசிய திரைப்படங்கள் வளர்ச்சிக் கழகம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றது.
எஸ்.சி/எஸ்டி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதில் அளித்த சிறப்பான பணியை அங்கீகரிப்பதற்காக மத்திய பொதுத் துறை நிறுவனங்களைப் பாராட்டும் விதமாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பாராட்டுரையின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டிருக்கின்றது.
பெய்ஜிங்கில் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியா - சீனாவின் கூட்டுப் பணிக் குழுவின் 8வது கூட்டம் நடத்தப்பட்டது.
தீன்தயாள் உபாத்யாய - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் (The Ministry of Housing & Urban Affairs - MoHUA) சஹரி சம்ரிதி உத்சவ் என்ற திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது.
இந்த நிகழ்வானது சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்ற அரசுத் திட்டங்களை அணுகுவதை வசதிப்படுத்தும் அந்த அமைச்சகத்தின் முயற்சிகளைக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தியக் கடற்படையில் நடத்தப்படுகின்ற மிகுந்த பெருமையுடையதும் பழமையான கடற்படை விளையாட்டு நடவடிக்கைகளில் ஒன்றானதுமான ரீகாட்டா கொச்சிப் பகுதி படகு இழுத்தலின் 2019வது ஆண்டு பதிப்பு, கொச்சியில் நடத்தப்பட்டது.
ஐன்எஸ் துரோணாச்சாரியாவைச் சேர்ந்த அணி ஒட்டுமொத்த ரீகாட்டா கோப்பையையும் வென்றது.