ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியின் முதலாவது பல்கலைக்கழகமான லடாக் பல்கலைக்கழகத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் எகிப்தைச் சேர்ந்த முகமது எல் செர்பினியை வீழ்த்தி இந்திய ஸ்குவாஷ் வீரர் ரமீத் தண்டூன் 2019 ஆம் ஆண்டின் சியாட்டில் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவருடைய வாழ்நாளில் அவரது நான்காவது பட்டமாகும்.
மத்திய அமைச்சரவையானது வருமான வரி மற்றம் மறைமுக வரிகளுக்கான குறைதீர் நிறுவனங்களை ஒழிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
வருமான வரி தொடர்பாக பொது மக்களின் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக 2003 ஆம் ஆண்டில் வருமான வரி குறைதீர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதில் தன்னுடைய பங்கைச் செலுத்தியதற்காக இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்தியத் தலைமையகப் பிரிவிற்கு “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகின் நீர்த்த பெட்ரோலிய வளிமத்தின் (LPG – Liquified Petroleum Gas) இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. இது விறகு மற்றும் மாட்டுச் சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு மாற்றாக தூய்மையான எரிபொருட்களுக்கான அரசின் முன்னெடுப்புகளால் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
மத்திய அமைச்சரவையானது திரைப்படத் துறைச் சட்டம் 1952-ஐத் திருத்துவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை பரிந்துரைத்த திரைப்படத் துறை திருத்த மசோதா, 2019ற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மசோதா அங்கீகரிக்கப்படாத முறையில் திரைப்படங்களை வீடியோ எடுத்தல் மற்றும் திரைப்படங்களை அதன் உண்மைப் பிரதி போன்றே மறுமுறை எடுத்தல் ஆகியவற்றிற்கு தண்டனைகள் வழங்குவதன் மூலம் திருட்டுத் திரைப்படங்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் கலைஞரான சசிகாந்த் பாட்டீல் CIMA (Centre of International Modern Art) விருதின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜெண்டினாவிற்கான இந்தியாவின் அடுத்தத் தூதராக தினேஷ் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.