TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2019 1988 days 574 0
  • கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மரபுசார் அமைப்புகளின் துறைகள் மீது ஒத்துழைப்பு நல்கிட மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அன்னதத்தாளர்களுக்கு (விவசாயிகளுக்கு) நிதியுதவி அளிப்பதற்காக “அன்னதத்தா சுஹிபாவா” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • வான்வழி மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஏற்பட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவற்படை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் கையெழுத்திட்டுள்ளன.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான ரஞ்சித் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டாவது முறையாக சௌராஷ்டிராவை வீழ்த்தி விதர்பா அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் விதர்பா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.
  • புதிய அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் ஒரு நாளில் சராசரியாக 10 மணி நேரங்களுக்கு மேல் ஆன்லைனில் (நிகழ் நேரத்தில்) இருக்கும் மிக அதிகளவிலான இணையப் பயனாளர்களை பிலிப்பைன்ஸ் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்திலும் தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பைப் போட்டியில் உலக சாம்பியனான இந்திய பளு தூக்குதல் வீரர் சாய்ஹோம் மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • வெள்ளிப் பதக்க நிலையிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்தமாக ரூபாய் 70,792 கோடிகள் வரி வசூலித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • ஐஐடி மெட்ராஸ் ஆனது தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மீதான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது ஜெர்மனியை மையமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் நிறுவனமான ராபர்ட் போஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்