கோயம்புத்தூரில் வையம்பாளையத்தில் விவசாயிகளின் தலைவரான நாராயணசாமி நாயுடுவின் சிலை மற்றும் மணி மண்டபத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
சிறந்த ஆளுகைக்கான இந்தியாவின் தேசிய மையமும் (India’s National Centre for Good Governance - NCGG) வங்க தேசத்தின் பொது நிர்வாக அமைச்சகமும் இணைந்து 1800 வங்கதேச குடிமையியல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
கிரேட் இந்தியன் பஸ்டார்ட் (கான மயில்) என்னும் பறவையை அடுத்த வருடம் குஜராத்தில் நடைபெற இருக்கும் இடம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (UN Convention on the Conservation of Migratory Species – CMS COP) 13-வது மாநாட்டிற்கான சின்னமாக மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இம்மாநாடு உலக வனவுயிர் மாநாடு என்றும் அறியப்படும்.
இந்த சின்னம் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனால் வெளியிடப்பட்டதோடு அந்த அமைச்சகத்தால் அப்பறவை செல்லமாக “கிபி” என்று பெயரிடப்பட்டத் தகவலும் அவரால் வெளியிடப்பட்டது.
“சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் – நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை” என்ற மூல் சந்த் சர்மாவால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவின் தலைமை நீதிபதியால் வெளியிடப்பட்டது.
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்திருக்கின்றார்.