மின்னணு வர்த்தகச் சந்தையில் நியாயமான மற்றும் போட்டிச் சூழ்நிலையை இயலச் செய்திடும் வகையில் அரசு மின்னணுச் சந்தை அமைப்பும் (Government e Marketplace - GeM) இந்தியப் போட்டி ஆணையமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கேரள உயர் நீதிமன்றம், வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பணமெடுப்புகளின் காரணமாக வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான பொறுப்பிலிருந்து வங்கிகள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்திருக்கின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி 2 கோடி ரூபாய்க்கு அதிகமாக வைப்புகளை மிகப் பெரியத் தொகை என்று வரையறுக்க முடிவு செய்துள்ளது. இது முந்தைய 1 கோடி ரூபாயிலிருந்த வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை வங்கிகளின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை அதிகப்படுத்தும்.
கராச்சியின் பாகிஸ்தான் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் “அமைதிக்காக ஒன்றுபடுதல்” என்ற கருத்துருவுடன் உலகம் முழுவதிலும் இருந்து 46 நாடுகள் பங்குபெறும் 5 நாட்கள் நடைபெறுகின்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான “அமான்-19” பயிற்சி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த பயிற்சி ஒருவருக்கொருவர் மற்ற நாடுகளின் கடற்பயணமுறை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கான மன்றத்தை ஏற்படுத்தவும் கடலில் பொதுவான ஆபத்துகளை எதிர்கொள்வதில் இருக்கும் செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டுப் பணியாளர்கள் நீதியை அணுகுவதை மேம்படுத்தும் நோக்கில் அபுதாபி நீதிமன்ற அமைப்பில் இந்தி மூன்றாவது அலுவல்பூர்வ மொழியாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மக்கள் நீதிமன்ற நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவிட அதிகாரிகள் சிக்கலான சட்டமொழி வழக்குகளை விளக்குவதற்கான ஒரு முயற்சியில் இருமொழி கையேட்டுக் குறிப்புகளையும் உருவாக்கியிருக்கின்றனர்.